• Fri. May 8th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாடு, புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

ByA.Tamilselvan

Jan 5, 2023

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்துள்ள நிலையில் தமிழக முழுவதும் கடும் குளிர் நிலவுகிறது. அதே வேளையில் வானிலை மையம் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் நிலவ வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் .தமிழகம் ,புதுச்சேரியில் கிழக்கு காற்றின் வேகமாறுபாடு வரும் 5 நாட்கள் காரணமாக ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது