• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

Byகாயத்ரி

Sep 5, 2022

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், திருச்சி, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 21 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும், சென்னையில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை இரு நாட்களுக்கு தொடர வாய்ப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று நாளை நீலகிரி, கோவை, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் நாளை 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை மையம் கூறியுள்ளது. நாளை மறுநாள் நீலகிரி, கோவை, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி மிக கனமழையும் 15 மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.