

தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ள புதுமைப்பெண் திட்டம் இந்தியாவுக்கே வழிகாட்டும் திட்டமாகும் என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பாராட்டியுள்ளார்.
ஆசிரியர் தினமான இன்று தமிழக அரசு சார்பில் 3 புதிய திட்டங்கள் தமிழக அரசின் சார்பாக தொடங்கப்பட்டன.. 15 மாதிரி பள்ளிகள், 26 தகைசால் பள்ளிகள், கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டமான புதுமைப்பெண் திட்டம் ஆகிய திட்டங்களின் தொடக்க விழா நடைபெற்றது. தமிழக அரசின் அழைப்பை ஏற்று இந்த விழாவில் கலந்து கொள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துகொண்டார்.
இவ்விழாவில் டெல்லி முதல்வர் அரவிந்தகெஜிரிவால் பேசும்போது …”இந்தியாவுக்கே வழிகாட்டும் புரட்சிகரமான திட்டம் தான் புதுமைபெண் திட்டம் என பாராட்டு தெரிவித்துள்ளார்.புதுமைபெண் திட்டம் உட்பட கல்வித்துறையில் பல புதிய முன்னெடுப்புகளை எடுத்துவரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.மகளிருக்கான இலவச பேருந்து பயணத்திற்கு அடுத்தபடியாக இந்த திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
