• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

கீரனூர் கீர்த்தி பெறும் அளவுக்கு திட்டங்கள் செயல்படுத்தப்படும் சக்கரபாணி பேச்சு..,

ByS.Ariyanayagam

Apr 16, 2026

மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் கீரனூர் மட்டுமல்ல சுற்றியுள்ள கிராமங்களும்
கீர்த்தி பெறும் அளவுக்கு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அமைச்சர் சக்கரபாணி பேசினார்.

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீரனூர், சரவணம்பட்டி,பூலாம்பட்டி, மரிச்சிலம்பு, கள்ளிமந்தயம் உள்ளிட்டபகுதிகளில் அமைச்சர் சக்கரபாணி வாக்குகள் கேட்டு பேசும் போது:, ஐந்து ஆண்டு ஆட்சி காலத்தில் தொப்பம்பட்டி மற்றும் கேதையுறும்பு பகுதிகளில் ரூ. 22 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. பழனி, தாராபுரம் சாலையில் ரூ. 69 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டுவதற்கு நிர்வாக அனுமதி பெற்றுள்ளது, வாகரையில் மக்காச்சோளம் ஆராய்ச்சி மையம்அமைக்கப்பட்டுள்ளது,

கீரனூர், கள்ளிமந்தையம், மிடப்பாடி தேவத்தூர், கேதையுறும்பு, வாகரை ரூ.4. 96 கோடி மதிப்பீட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தாகம், மகப்பேறு பிரிவு பணியாளர் குடியிருப்பு, இதர அடிப்படை உட்கட்டமைப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளன.கொ.கீரனூர் ஊராட்சி மற்றும் கீரனூர் பேரூராட்சியில் பொது சுகாதார நிலையங்களுக்கு ரூ.100 கோடி மதிப்பீட்டில் பொது சுகாதார ஆய்வக கட்டிடம், மருத்துவ பணியாளர் குடியிருப்பு கட்டப்பட்டுள்ள.ரூ.7. 13 கோடி மதிப்பீட்டில் ஒட்டன்சத்திரம் மற்றும் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் கட்டப்பட்டுள்ளன..ரூ 1.24 கோடி மதிப்பீட்டில் கீரனுர் பேரூராட்சிக்கு புதிய அலுவலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கீரனூர் மட்டுமல்ல சுற்றியுள்ள கிராமங்களும் கீர்த்தி பெறும் அளவுக்கு திட்டங்கள் செயற்படுத்தப்படும். தும்மல பட்டியில் ரூ.65 கோடி மதிப்பீட்டில் துணை மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.