• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

எந்த பணி கொடுத்தாலும் சிறப்பாக செய்யக்கூடியவர் சக்கரபாணி..,

ByS.Ariyanayagam

Apr 18, 2026

எந்தப் பணி கொடுத்தாலும் அதில் சிறப்பாக செய்யக்கூடியவர் சக்கரபாணி. அவரது பெயர் அர.சக்கரபாணி, ஆனால் அனைத்து பணிகளும் அவர் முழு சக்கரபாணி என முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.

திண்டுக்கல்லில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: திண்டுக்கல் உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி கொடி நாட்ட வேண்டும். ஒட்டன்சத்திரம் தொகுதி வேட்பாளர் அமைச்சர் சக்கரபாணி. அமைச்சர் ஐ பெரியசாமியின் உடன்பிறவா சகோதரர். கட்சியிலிருந்து எந்தப் பணி கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிக்க கூடியவர் தான் சக்கரபாணி. அசராமல் உழைக்கக் கூடியவர்.

அவர் பெயரோ அர. சக்கரபாணி, பணிகளில் அவர் முழு சக்கரபாணி. அவரது உழைப்பை மிஞ்ச யாரும் இல்லை. எதிலும் திறமாக பாடுபடக்கூடியவர். ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு குடிநீர், போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி மையம் உட்பட பல திட்டங்களை கொண்டுவந்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, 10 கேள்விகளை நான் கேட்கிறேன். பெரியார் படத்தை மறைத்ததை ஏன் எதிர்க்கவில்லை.

இந்தி படித்தால் தான் கல்வி உதவித் தொகை என மத்திய அரசு கூறுவதை ஏன் எதிர்த்து கேட்கவில்லை. கிறிஸ்தவர்களுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வரும் சட்டத்தை ஏன் எதிர்க்கவில்லை சிறுபான்மை மக்களுக்கு எதிராக மத்திய அரசு செய்யும் சதிகளை ஏன் தடுக்கவில்லை, தொகுதி மறு வரையறை குறித்து எண் வாய் திறக்கவில்லை என்பது உட்பட 10 கேள்விகளை கேட்டு அசத்தினார்.