• Fri. Jan 17th, 2025

தூய்மை பணிகளை பார்வையிட்ட நகரமன்ற தலைவர்

ByG.Suresh

Jan 8, 2025

தமிழக முதல்வர் ஸ்டாலின் சிவகங்கை வருகை தருவதை முன்னிட்டு, தூய்மை பணிகளை நகரமன்ற தலைவர் பார்வையிட்டார்.

சிவகங்கை மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் சிவகங்கை வருகை தருவதை முன்னிட்டு, சிவகங்கை முழுவதும் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சிவகங்கை நகர் திருப்புத்தூர் மெயின் ரோடு, காஞ்சிரங்கால் சாலை ஓரங்களில் உள்ள செடி ,கொடிகள், அனைத்தும் JCB இயந்திரத்தின் மூலம் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. அதனை நகர் மன்ற தலைவர் சி. எம். துரை ஆனந்த் ஆய்வு செய்து பார்வையிட்டார். உடன் நகராட்சி சுகாதார அலுவலர் அப்துல் ஜாபர் மற்றும் நகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.