தமிழக அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து, ஆட்டோ தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு, சிவகங்கை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்டோ தொழிலாளர் வாழ்வை நாசமாக்கும் பைக் டாக்ஸியை தடை செய்ய வேண்டும். தொழிலாளர் நல வாரியம் மூலம் ஆட்டோ செயலி துவக்க வேண்டும். பதிவு செய்த ஆட்டோ தொழிலாளர்களுக்கு பொங்கல் போனஸ் 5000 ரூபாய் வழங்குவதோடு 6000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
இயற்கை மரணத்திற்கு 2 லட்சம் ரூபாயும், விபத்து மரணத்திற்கு 5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஐம்பதுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.