பாசுமதி அல்லாத புழுங்கல் அரிசிக்கு 20சதவீதம் ஏற்றுமதி வரியை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.
உலகளவில் அரிசியை அதிகளவில் ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா இருந்து வரும் நிலையில்இ மத்திய அரசு பாசுமதி அல்லாத புழுங்கல் அரிசி மீதான ஏற்றுமதி வரியை 20சதவீதம் ஆக நிர்ணயித்துள்ளது.
புழுங்கல் அரிசி, புவிசார் குறியீடு என்ற அங்கீகாரம் பெற்ற மற்றும் இதர வகைகளுக்கும், மெருகூட்டப்பட்ட அரிசி, அரைப்பாகம் உடைக்கப்பட்ட அரிசி (குருணை) அல்லது முழுமையாக உடைக்கப்பட்ட அரிசிகளுக்கும் புதிய வரிவிதிப்பு பொருந்தும்.
சுங்க வரிச் சட்டம் 1975ன்கீழ் இரண்டாவது அட்டவணையில் செய்யப்பட்ட திருத்தங்களில் புதிய கட்டண வரிஇ பல்வேறு வகையான அரிசி வகைகளை ஏற்றுமதி வரி அமைப்பின்கீழ் கொண்டுவருவது உள்ளிட்ட திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
வரி விதிப்பின் மூலம் உள்நாட்டு சந்தையில் விலை ஏற்றத்தை தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அரிசிக்கு 20சதவீதம் ஏற்றுமதி வரி நிர்ணயித்த மத்திய அரசு
