தமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகைகணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்றுநாடார் பேரவையின் ஆலோசனைக் கூட்டத்தில் கோரிக்கை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
மதுரையில் மாட்டுத்தாவனி எம்ஜிஆர் பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில்
நாடார் பேரவையின சார்பாக தென்மண்டல மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த ஆலோசனை கூட்டத்திற்கு நாடார் பேரவை பொதுச் செயலாளர் சூலூர் சந்திரசேகரன் தலைமையிலும்துணைத் தலைவர் நிப்பான் தனுஷ்கோடி மற்றும் தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன் முன்னிலையிலும் சிறப்பு விருந்தினராக மாநில இளைஞரணி செயலாளர் கார்த்திக் கலந்து கொண்டார் இந்த ஆலோசனை கூட்டத்திற்கு மதுரை தேனி விருதுநகர் ராமநாதபுரம் கன்னியாகுமரி உட்பட தென்மண்டல மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து செய்தியாளர் சந்திப்பில் சூலூர் சந்திரசேகரன் கூறியது தமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது எனவும் வருகிற மே ஐந்தாம் தேதி எர்னாவூர் நாராயணனின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கு தமிழக முழுவதும் இருக்கின்ற நாடார் பேரவை சார்ந்த நிர்வாகிகள் அந்தந்த பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் வழங்கிட ஏற்பாடுகள் செய்யவும் அதே நேரத்தில் இளைஞர்கள் துடிப்பு மிக்க நாடார் சமுதாய மக்கள் நாடார் பேரவையில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். அத்தனை பேர்களையும் இணைக்க வைக்கும் விதமாக நாடார் பேரவையில் ஒரு ஐடி விங் ஆரம்பித்து அதன் மூலமாக அத்தனை மூலமாக அத்தனை மாவட்டங்களும் தொடர்பு கொள்கின்ற வசதியை விரிவாக்கம் செய்வதற்கு ஆலோசனை நடத்தி உள்ளோம் அதே நேரத்தில் இன்றைக்கு தமிழகத்தில் தமிழக அரசு மக்கள் தொகையை ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தியும் நாடார் பேரவை ஒவ்வொரு மண்டலமாக தொடர்ந்து நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது திட்டமிட்டுள்ளது அத்தனை மாவட்டங்களிலும் இந்த மண்டல ஆலோசனை கூட்டங்கள் நடைபெற இருக்கிறது நாடார் சமுதாயம் பிரிந்து கிடந்த சங்கங்களையும் ஒருங்கிணைக்கின்ற அமைப்பாக அனைத்து நாடார் உறவின்முறை சங்கங்களையும் ஒன்றிணைத்து சமுதாயத்தில் பனைத் தொழிலில் ஈடுபடுகின்றவர்களுக்கு பனைத் தொழில் வாரியத்தின் சார்பாக இருக்கின்ற அத்தனை பேருக்கும் கிடைக்க உதவிகளும் கிடைக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும்இந்த ஆலோசனை கூட்டத்திற்கான ஏற்பாட்டினை மதுரை மாவட்ட நிர்வாகிகள் சுதாகர் குமார் காளியப்பன் மற்றும் மகளிர் அணியினர் பானுமதி மஞ்சுளா ஆகியோர் செய்து இருந்தனர்