
கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், பெரிய நெகமம் பேரூராட்சியில், சின்னேரிபாளையம் பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி துவக்க விழா நிகழ்ச்சியினை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்!
பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் வரதராஜ், கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் K.V.K.S.சபரி கார்த்திகேயன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் லட்சுமி நாச்சிமுத்து, பெரியநெகமம் பேரூர் கழக செயலாளர் சக்ரவர்த்தி, சின்னேரிபாளையம் வார்டு நிர்வாகி லோக. ரகு, மாவட்ட பிரதிநிதி ராசு எ.முத்துக்குமார், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் R.K.நந்து, பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர் சரவணக்குமார், பேரூர் கழக இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சங்கர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
அதை தொடர்ந்து ஸ்ரீ கேவிகே எஜுகேசன் சேரிட்டபில் டிரஸ்ட் சார்பில் சின்னேரிபாளையம் மதுரை வீரன் கோவில் கட்டுமான பணிக்கு 25000 ரூபாயும், ரங்கம்புதூர் மதுரை வீரன் கோவில் கட்டுமான பணிக்கு 25000 ரூபாயும், பெரியநெகமம் பேரூராட்சி உட்பட்ட காளியப்பன்பாளையம், சின்னேரிபாளையம், ரங்கம்புதூர் ஆகிய பகுதிகளுக்கு சின்டெக்ஸ் டேங்க்குகள் வழங்கப்பட்டன.