• Wed. Aug 26th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

மதுரையில் சிசிடிவி கண்காணிப்பு கேமிரா செயல்பாடு துவக்கம்..!

Byகுமார்

Dec 3, 2022

மதுரை கட்ராப்பாளையம் பகுதியில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகம் நடைபெறுவதாக வந்த புகாரைத் தொடர்ந்து, அப்பகுதியில், சிசிடிவி கண்காணிப்பு கேமிரா செயல்பாட்டை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்துள்ளார்.
மதுரை கட்ராப்பாளையம் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட செப்பல் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் இந்த பகுதியில் அடிக்கடி கொலை கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருவதால் தொடர்ந்து காவல் நிலையத்தில் ஏராளமான புகார் அளிக்கப்பட்டு வந்தது. இதனைதொடர்ந்து குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு கட்ராப்பாளையம், சுண்ணாம்பு கார வீதி உள்ளிட்ட முக்கிய பகுதியில் சுமார் 30 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை செப்பல் பஜார் அசோசியேசன் சார்பில் பொருத்தப்பட்டு தொடர் கண்காணிப்பு செயல்பாட்டை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமலைக்குமார் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.