


புதுச்சேரி திருக்கனூர் அடுத்த செல்லிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமரன், தனியார் பேருந்து ஓட்டுனரான இவருக்கும் சேதராப்பட்டை சேர்ந்த சங்கர் என்பவருக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் முத்துக்குமரன் நேற்று சேதராப்பட்டு பஸ் நிலையத்தில் பயணிகளை பேருந்தில் ஏற்றிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த சங்கர் முன்விரோதம் காரணமாக முத்துக்குமரனை ஆபாசமாக திட்டியதோடு மறைத்து வைத்திருந்த கத்தியால் ஓட்டுநர் முத்துக்குமரனை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடினார்.

இதில் படுகாயம் அடைந்து முத்துக்குமரன் முன்னாடிப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார்.
இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த திருக்கனூர் போலீசார் பேருந்தில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் வெளியிட்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
பேருந்தில் ஓட்டுநரை சரமாரியாக வெட்டிய வாலிபரின் சிசிடிவி காட்சி தற்போது இணையத்திலும் வைரலாகி வருகிறது.

