


இந்து கடவுள்களின் மதச் சின்னங்களை விபச்சார தொழிலுடன் இணைத்து பெண்களையும், இந்து மத கடவுளையும் அவமதித்து அநாகரிமாக பேசிய தமிழக அமைச்சர் பொன்முடியை கண்டித்தும், உடனடியாக பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி அவரை கைது செய்ய வேண்டும் என கோரி புதுச்சேரி அண்ணாசிலை அருகே அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்டனர்.

அப்போது அதிமுக பெண் நிர்வாகிகள் பொன்முடியின் புகைப்படத்தை கிழித்து எரிந்தும், துடைப்பத்தால் அடித்தும் தங்களது எதிர்ப்பை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மாநில செயலாளர் அன்பழகன்,
பெண்களை இழிவுபடுத்திய பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து தமிழக அரசு நீக்க வேண்டும், அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கூறினார். மேலும் பொன்முடி புதுச்சேரி வந்தால் அதிமுக அவருக்கு தக்க பதிலடியை கொடுப்போம் என கூறினார்.

