• Mon. May 6th, 2024

சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு..!

Byவிஷா

Dec 13, 2023

இந்தியா முழுவதும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் படிக்கும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
2024ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முன்னதாகவே தேர்வுகளை நடத்தி முடிக்க சிபிஎஸ் இ திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் ஜேஇஇ, நீட் தேர்வு தேதிகள் இவைகளை கணக்கில் கொண்டு இந்த தேர்வு தேதிகள் திட்டமிடப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவணர்களுக்கான பொதுத் தேர்வு தேதி ஒவ்வொரு கல்வியாண்டின் தொடக்கத்திலேயே, பள்ளிக்கல்வித் துறை சார்பில் வெளியிடப்படும் ஆண்டு நாட்காட்டியில் தெரிவிக்கப்பட்டு இருக்கும். அந்த வகையில், இரண்டு தேர்வுகளும் பிப்ரவரி 15-ம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
023-ம் ஆண்டில், சிபிஎஸ்இ தேதித்தாள்கள் டிசம்பரில் வெளியிடப்பட்டது மற்றும் தேர்வுகள் பிப்ரவரி 15-ம் தேதி வெளியிடப்பட்டது. 10-ம் வகுப்பு இறுதித் தேர்வுகள் மார்ச் 21-ம் தேதியும், 12-ம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 5-ம் தேதியும் முடிவடைந்தன. தாள்கள் ஒரே ஷிப்டில் காலை 10.30 முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெற்றன.
அந்த வகையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி மார்ச் 13 -ம் தேதி நிறைவடைகிறது. அதேபோல, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 2-ம் தேதி நிறைவடைகிறது.
ஜேஇஇ உள்ளிட்ட தேர்வுகளை கருத்தில் கொண்டு சி.பி.எஸ்.இ. தேர்வு அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. www.cbse.gov.in, cbse.nic.in ஆகிய சி.பி.எஸ்.இ-யின் அதிகாரபூர்வ இணையதளங்களில் பொதுத்தேர்வு அட்டவணையை மாணவ-மாணவிகள் பார்க்கலாம் என்று சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *