தேனி மாவட்டம் போடி தாலுகா கோடாங்கி பட்டி ஊராட்சி அருகே பண்னை வீட்டில் வைத்து இருந்த தங்க முலாம் பூசப்பட்ட வெங்கல சிலை உட்பட பல்வேறு சிலைகளை திருடிய வழக்கில் பிரபல கஞ்சா வியாபாரி உட்பட ஆறு பேரை பழனிசெட்டிபட்டி போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கோடாங்கிபட்டி கிராமத்தில் மதுரை, சுந்தர் டையர்ஸ், பைபாஸ் ரோடு, நேதாஜி மெயின் ரோடு, சேமசுந்தரம் மனைவி தேன்பழம் (66 ) அவர்களுக்கு சொந்தமான பண்ணை தோட்டத்தில் மகன் ஸ்ரீ பாலாஜிக்கு குடியிருந்து வருகிறார்.இவர் பழனி செட்டிப் பட்டியில் சுந்தர் டையர்ஸ் கடை நடத்தி வருகிறார்.
தற்போது மகன் வியாபார ரீதியாக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு நாகர்கோவிலுக்கு சென்று தங்கி இருந்தார். கோடாங்கிபட்டி பண்ணை தோட்டத்தில் உள்ள வீடு ஆறு மாதங்களாக பூட்டி இருந்த வீட்டை வந்து பார்க்கும் போது வீட்டின் கதவு உடைத்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.உடனடியாக பழனிசெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
மேலும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்த போது தங்க முலாம் பூசப்பட்ட சிலைகள் உட்பட பல்வேறு பொருட்கள் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
கோடங்கிபட்டி கிராமத்தை சேர்ந்த ராஜா மகன் பிரபல கஞ்சா வியாபாரி ரமேஷ் 45, உள்பட சின்னச்சாமி மகன் சங்கர் 45, ஆசை தம்பி மகன் ஆனந்த் (42) உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்து பழனி செட்டிப்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.