ஜெயலலிதா மரண அறிக்கை பரிந்துரைபடி நடவடிக்கை- தமிழக அரசு உத்தரவு
ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைபடி சட்ட வல்லுநர்களின் ஆலோசனையை பெற்று நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு முடிவு.முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் இறுதி விசாரணை அறிக்கையில் வி.கே.சசிகலா, கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர்…
5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!
வைகை அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் வைகை ஆற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள 71 அடி உயரம்…
ஈபிஎஸ் தரப்பு நாளை உண்ணாவிரதம்?
எதிர்க்கட்சி துணைத்தலைவராக உதயகுமாரை அறிவிக்காததை கண்டித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுகவினர் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக தகவல்.சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதில் ஆர்.பி.உதயகுமாரை தேர்வு செய்து சபாநாயகரிடம் மனு அளித்தும் அது ஏற்கப்படாததால் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர்…
கலெக்டர் ,3 அதிகாரிகள்,17 போலீசார் மீது நடவடிக்கை?- அருணா ஜெகதீசன் அறிக்கை
அக்.18ல் மழைக்கால கூட்டத்தொடரில் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட அருணா ஜெகதீசன் அறிக்கையில் கலெக்டர், 3 அதிகாரிகள், 17 பேலீசார் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில் துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் அப்போதைய தூத்துக்குடி…
சசிகலா மீது விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் -ஆறுமுகசாமி ஆணையம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.ஜெயலலிதாவை வீட்டில் இருந்து மருத்துவமனையில் அனுமதித்த நபர்களிடம் அசாதாரணமான செயல் எதுவும் கண்டறியப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. அறிக்கையில், சசிகலா, கே.எஸ்.சிவக்குமார், ராதாகிருஷ்ணன், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம்…
தமிழக சட்டசபையின் கூட்டத்தொடர் தொடங்கியது
தமிழக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று சபாநாயகர் அப்பாவுவின் இரங்கல் குறிப்போடு தொடங்கியுள்ளது.தமிழக சட்டசபையின் கடைசி கூட்டத் தொடர் கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி முதல் மே 10-ந்தேதி வரை நடந்து முடிந்தது. ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில்,…
மருத்துவ மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் அமைச்சர் வெளியிட்டார்
மருத்துவ மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் தமிழக அரசால் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். இக்கலந்தாய்வை அரசு சார்பில்…
26 மாவட்டங்களில் 2நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் 26 மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும்…
கரூர்- திண்டுக்கல் மாவட்டங்களில் தேவாங்கு சரணாலயம்
இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் கரூர்,திண்டுக்கல் மாவட்டங்களில் அமைகிறது எனதமிழக அரசு அறிவிப்பு.தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் …. தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையானது, கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் 11 ஆயிரத்து 806 ஹெக்டேர் நிலத்தை…
2023-ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை பட்டியல் வெளியீடு
தமிழகத்தில் 2023ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது.ஞாயிற்றுக் கிழமைகள் தவிர்த்து, 24 நாட்கள் விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது விடுமுறை நாட்களாகக் குறிப்பிடப்பட்ட ஞாயிற்றுக்கிழமைகளுடன் பின்வரும் நாட்களும்…