தமிழ்நாடு கேரளா எல்லை பகுதிகளில் வெள்ளப்பெருக்கெடுத்து நிலச்சரிவு
கேரளா மாநிலம் வயநாடு மற்றும் தமிழ்நாடு கேரளா எல்லை பகுதிகளில் கனமழையின் காரணமாக வெள்ளப் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. அதே போல் நிலச்சரிவு ஏற்பட்டு நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் புதைந்துள்ளனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் அண்ணாதுரை உத்தரவின்…
கேரளா நிலச்சரிவு…5 கோடி நிதி உதவி மு.க.ஸ்டாலின் அறிவிப்பு…
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு தமிழ்நாடு அரசு ரூ.5 கோடி நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்து இருக்கின்றார். மேலும், தமிழ்நாடு அரசின் சார்பில் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு…
கேரளாவில் நிலச்சரிவு …ராகுல் காந்தி வலியுறுத்தல் ..
மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் கேரளா நிலச்சரிவு – ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். மீட்பு பணிகள் குறித்து கேரள முதல்வரிடம் கேட்டறிந்தேன். நிலச்சரிவு ஏற்படக்கூடிய இடங்களை கண்டறிந்து, அதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை…
தஞ்சை பெரியகோயிலில் லண்டன்வாழ் தமிழர்களின் நடன நிகழ்ச்சி!
லண்டன்வாழ் தமிழரான பாட்டுக்கு பாட்டு புகழ் ராதிகா மற்றும் தீபா, சுஜாதா ஆகியோர்கள் இணைந்து நிருத்திய சங்கீத அகாடமி நடனம் மற்றும் இசைப் பள்ளியை நடத்தி வருகின்றனர். இந்த அகாடமியின் சார்பில் வரும் ஜூலை 31ஆம் தேதி தஞ்சை பெரிய கோயிலில்…
100 அடியை எட்டியது மேட்டூர் அணையின் நீர்மட்டம்: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் முழுமையாக நிரம்பி விட்டன. இதனையடுத்து, அந்த அணைகளுக்கு வரும் உபரிநீர் முழுவதும் காவிரியில் திறந்து விடப்படுகிறது. குறிப்பாக,…
‘வரலாம் வா… வரலாம் வா…’
வெள்ளத்தில் ரெயிலுக்கு வழிகாட்டிய பாயின்ட்மேன்கள். வடமாநிலங்களில் கனமழை பெய்து வருவதால், அங்கு தண்டவாள பகுதிகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. பாயின்ட்மேன்கள் ரெயிலை அழைத்துச் செல்லும் காட்சி வீடியோவாக பதிவாகி சமூக வலைத்தளங்களில்.
மூணாறு மாட்டுப்பட்டி அணை திறப்பு …
கேரளா -இடுக்கி மாவட்டம் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், மூணார் மாட்டுப்பட்டி அணை முழு கொள்ளளவை எட்டி வரும் நிலையில்,அணையின் ஒரு மதகு 10 செ.மீ திறக்கப்பட்டு, அதன் வழியாக தண்ணீர் வெளியேற்றப்படும் காட்சிவெளியாகி உள்ளது.
கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் காய்ச்சல் பரவல் – கட்டுப்பாட்டு அறை திறப்பு
திருவனந்தபுரம்: கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பாதித்த 14 வயது சிறுவனுக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2018ம் ஆண்டு கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் காய்ச்சல் முதன்முதலாக பரவியது. அப்போது பெரும் பீதியை ஏற்படுத்திய இந்தக்…




