• Fri. Mar 29th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • மே தினத்தில் கிராம சபைக் கூட்டம்..,தமிழ்நாடு அரசு உத்தரவு..!

மே தினத்தில் கிராம சபைக் கூட்டம்..,தமிழ்நாடு அரசு உத்தரவு..!

மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் கிராம சபை கூட்டம், இந்தியக் குடியரசு நாள் (26, ஜனவரி), தொழிலாளர் தினம் (1, மே), சுதந்திர…

மருத்துவர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்

கனிம வள கொள்ளையில் ஈடுபட்ட மருத்துவர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் புகார்சேலம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலைய விரிவாக்கத்திற்காக வெட்டி எடுக்கப்பட்ட பாறை கனிமங்களை தனியார் கல் குவாரிகளுக்கு விற்பனை செய்து பல லட்சம்…

திருப்பரங்குன்றம் சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீரில் சிக்கிய அரசு பேருந்து

மதுரையில் நேற்று இரவு பெய்த கனமழையில் திருப்பரங்குன்றம் சுரங்கப்பாதையில் தேங்கிய தண்ணீரில் சிக்கிய அரசு பேருந்து. மதுரையில் கடந்த இரண்டு நாட்களாக புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதில் ஒரு சில இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்த…

மதுரையில் இடி மின்னலுடன் கொட்டிய கோடை மழை- பாதியில் முடித்துக்கொண்ட சுவாமி வீதி உலா

மதுரையில் இன்று மாலை வெப்பச் சலனம் காரணமாக பெரியார் பேருந்து நிலையம், ரயில் நிலையம், மீனாட்சி அம்மன் கோவில், மேலவாச வீதி, தெற்கு மாசு வீதி, கீழமாச வீதி உள்ளிட்ட மதுரை மாநகர் பகுதிகளில் கனத்த மழை பெய்தது. இதனால் சித்திரை…

முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டுக்கு _ தமிழிசை பதில்

புதுச்சேரி மாநிலத்தைப் பொறுத்தவரை மக்கள் விரோத நடவடிக்கையில் மத்திய அரசு என்றைக்கும் செயல்படாது தவறாக பிரச்சாரம் செய்கின்றனர் .அதானி குழுமத்துடன் இணைந்து மத்திய அரசு நிலத்தை கையப்படுத்துவதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டுக்கு _ தமிழிசை பதில்மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே…

கோவையில் கடும் வெயிலில் பணிபுரியும் காவலர்களுக்கு ..,பழங்களைக் கொடுத்து குளிர்விக்கும் இளைஞர்கள்..!

தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், கோவையில் கடும் வெயிலில் பணிபுரியும் காவலர்களுக்கு இளைஞர்கள் பழங்களைக் கொடுத்து அவர்களைக் குளிர்வித்து வருவது அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.கோவையில் கடந்த வாரத்திலிருந்து சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் அவதியடைந்து வருகிறது.…

தமிழகம் முழுவதும் 103 போலி மருத்துவர்கள் கைது..!

தமிழகம் முழுவதும் போலி மருத்துவர்கள் அதிகமாக நடமாடுவதாக வந்த புகாரை அடுத்து, போலீசாரின் தேடுதல் வேட்டையில் 103 போலி மருத்துவர்கள் பிடிபட்டிருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கிளினிக் அமைத்து போலி டாக்டர்கள் மருத்துவம் பார்த்து வருவதாக புகார் எழுந்தது.…

மதுரை மாவட்டத்திற்கு மே 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை..!

மதுரை சித்திரை திருவிழாவின் பிரசித்தி பெற்ற கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு மே 5ஆம் தேதியன்று வருவதால், அன்று மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நேற்று முன்தினம் (ஏப்.23) கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா…

வெப்பம் அதிகரிப்பதை தடுக்க சமூக ஆர்வலர் வழிகாட்டி மணிகண்டன் விழிப்புணர்வு

மதுரையில் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் தனது மூன்று சக்கர ஸ்கூட்டரில் தனிநபர் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மேற்கொண்டார்.பூமி வெப்பம் அதிகரிப்பை தடுக்க மரங்களை அதிகம் நட வேண்டும் என்று பதாகை ஏந்தி துண்டு பிரசுரங்களை வழங்கி பொதுமக்களிடம்…

சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா

சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது .கோவில் நிர்வாகிகள் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர்.கலந்து கொண்டனர்…மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கொடியேற்றம் நேற்று இரவு நடைபெற்றது விழாவானது மொத்தம் 12 நாட்கள்…