மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட 13 வது வார்டு பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி அருகில் மங்கம்மாள் சத்திரத்திற்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றி கட்டத் தொடங்கிய வணிக நிறுவன கட்டிட பணிகளை பேரூராட்சி அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

சோழவந்தான் பேரூராட்சி 13வது வார்டு மெயின் ரோட்டில் நடராஜர் என்பவரது வீட்டிற்கு அருகில் உள்ள மங்கம்மாள் சத்திரத்திற்கு சொந்தமான இடத்தில் கண்ணன் என்பவர் பேரூராட்சி அனுமதியின்றி கட்டிடம் கட்ட பணிகள் தொடங்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து அந்தப் பகுதி பொதுமக்கள் 13 வது வார்டு கவுன்சிலருக்கும் பேரூராட்சி அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர்.

மேலும் அனுமதியின்றி பணிகள் நடைபெற்று வருவதால் கட்டிட பணிகளை தொடங்கக்கூடாது என்று கூறிய நிலையில் என்ஜினியர் சுரேந்திரன் என்பவர் அதிகார தோரணையில் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும் பணிகளை தொடங்கும் போது அருகில் உள்ளவர்களிடம் எந்த ஒரு தகவலும் தெரிவிக்காமல் அடுத்தவர்களின் கொட்டக்காலை பிடிங்கி கீழே தள்ளிவிட்டு அத்துமீறி கட்டடம் கட்டியதாகவும் கூறப்படுகிறது பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் 13 வது வார்டு கவுன்சிலர் மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் வந்து விசாரித்தனர் பின்னர்அனுமதி இன்றி கட்டடம் கட்ட தொடங்கியதாக கூறி பணிகளை உடனடியாக நிறுத்தினர்.
மேலும் மின் இணைப்பும் முறையாக பெறப்படவில்லை என கூறப்படுகிறது இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கட்டிடம் கட்டுவதாக கூறி செங்கல் மணல் கற்களை சாலையின் நடுவே கொட்டி சென்றதால் அந்த இடத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன் அருகிலேயே அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ள நிலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மாணவிகள் அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று பேருந்தில் செல்லக்கூடிய நிலையில் பள்ளி மாணவிகளுக்கு இடையூறாகவும் கட்டட பணிகளை தொடங்கியதாக அந்தப் பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.

ஆகையால் முழுமையாக அனுமதி பெற்று கட்டிட பணிகளை தொடங்க வேண்டும் அல்லது கட்டடம் கட்டும் பணியை நிரந்தரமாக நிறுத்தி வைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.




