• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தினம் ஒரு திருக்குறள்

  • Home
  • குறள் 106

குறள் 106

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்கதுன்பத்துள் துப்பாயார் நட்பு. பொருள் (மு.வ): குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கலாகாது: துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடாலாகாது.

குறள் 105:

உதவி வரைத்தன்று உதவி உதவிசெயப்பட்டார் சால்பின் வரைத்து.பொருள் (மு.வ)கைமாறாகச் செய்யும் உதவி முன் செய்த உதவியின் அளவை உடையது அன்று, உதவி செய்யப்பட்டவற்றின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும்.

குறள் 104:

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்கொள்வர் பயன்தெரி வார். பொருள் (மு.வ): ஒருவன் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன் பயனை ஆராய்கின்றவர், அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர்.

குறள் 103:

நயனிலன் என்பது சொல்லும் பயனிலபாரித் துரைக்கும் உரை.பொருள் (மு.வ):ஒருவன் பயனில்லா பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.

குறள் 101:

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்வானகமும் ஆற்றல் அரிது. பொருள் (மு.வ): தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.

குறள் 100:

இனிய உளவாக இன்னாத கூறல்கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. பொருள் (மு.வ): இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும் போது அவற்றை விட்டு காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது.

குறள் 99:

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோவன்சொல் வழங்கு வது. பொருள் (மு.வ): இனிய சொற்கள் இன்பம் பயத்தலைக் காண்கின்றவன், அவற்றிற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயன் கருதியோ?

குறள் 98:

சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்இம்மையும் இன்பம் தரும். பொருள் (மு.வ): பிறர்க்குத் துன்பம் விளைக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனுக்கு இன்பம் தரும்.

குறள் 97:

நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்றுபண்பின் தலைப்பிரியாச் சொல். பொருள் (மு.வ): பிறர்க்கு நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள்,வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும்.

குறள் 96:

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவைநாடி இனிய சொலின் பொருள் (மு.வ): பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடையச் சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும்.