• Sun. Nov 16th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மாணவர் சங்க நிர்வாகிகள் 50 பேர் மீது வழக்கு..,

Byரீகன்

Sep 5, 2025

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் உருமு தனலெட்சுமி கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கம் மாவட்ட துணை செயலாளர் ஆர்த்தி, கிளை தலைவர் அபி ஆகியோர் தலைமையில் கல்லூரி முன்பு மத்திய அரசு அறிவியலுக்கு புறம்பான மற்றும் காவி மயத்தை திணிக்கும் பல்கலைக்கழக மானிய குழுவில் எல்.ஓ.சி.எப் வரையறை இன்றி திரும்ப பெற வலியுறுத்தி யுஜிசி அறிக்கை மற்றும் பாரதபிரதமர் மோடியின் உருவ படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தப் போராட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும் கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டனர். இந்த நிலையில் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து பிரதமர் மோடி உருவப்படத்தை எரித்து தொடர்பாக பாஜக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட கல்லூரி மாணவர்கள் 50 பேர் மீது திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.