• Thu. Apr 25th, 2024

மிகவும் சலிப்பான வேலையை கொடுத்த நிறுவனத்திற்கு எதிராக வழக்கு

நாம் அனைவரும் மிகவும் பிடித்த துறைகள் அல்லது ஆர்வங்களைப் பின்பற்றி நம்மை புத்துணர்ச்சியுடன் உணர வைக்கும் வேலைகளை செய்ய விரும்பினாலும், நம்மில் பலர் காலை 9 முதல் மாலை 6 மணி வரை இருக்கும் அல்லது கிடைக்கும் வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறோம்.

இன்னும் சிலரோ நைட் ஷிப்ட்களில் வேலை பார்த்து உடலை வெகுவாக கெடுத்து கொள்கின்றனர். சில நேரங்களில் விரும்பாத வேலைகள் அல்லது வேலை நேரங்கள் ஒருவரது உயிருக்கே உலை வைக்க கூட செய்கின்றன. பாதகங்கள் அனைத்தும் தெரிந்திருந்தாலும் வீட்டு சூழ்நிலை மற்றும் 3 வேளை உணவுகளை பலரும் கடனே என்று வாழ்நாள் முழுவதும் பிடிக்காத வேலைகளை தொடர்கின்றனர்.

ஆனால் புத்துணர்ச்சி தராத போர் அடிக்கும் வேலைகளை செய்து மிகவும் சலிப்படைந்த யாராவது வேலை செய்த நிறுவனத்தின் மீது வழக்கு தொடரந்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பாரிஸை சேர்ந்த ஒரு மனிதர் “Boring Job”தொடர்பாக வேலை செய்த நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர்ந்தார். இறுதியில் வழக்கு தொடர்ந்தவருக்கு இழப்பீடும் வழங்கப்பட்டது சர்வதேச அளவில் வியப்பையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

பாரீஸ் நகரை சேர்ந்த ஃபிரடெரிக் டெஸ்னார்ட் (Frederic Desnard) என்ற பிரெஞ்சு மனிதரே வேலை செய்த நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தவர் ஆவார். பிரான்சில் உள்ள ஆடம்பர வாசனை திரவியங்கள் தயாரிப்பு நிறுவனமான Interparfums மீது தான் ஃபிரடெரிக் டெஸ்னார்ட் வழக்கு தொடர்ந்தார். 2015-ஆம் ஆண்டு வரை இன்டர்பர்ஃபும்ஸ் (Interparfums) வாசனை திரவியங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் மேமேஜராக பணியாற்றிய ஃபிரடெரிக் டெஸ்னார்ட், தனது வேலையில் சலிப்படைந்ததற்காக அடுத்த ஆண்டு அதாவது 2016-ஆம் ஆண்டு Interparfums நிறுவனம் மீது வழக்குத் தொடர்ந்தார். Interparfums நிறுவனத்திற்கு எதிரான தனது மனுவில் ஃபிரடெரிக் டெஸ்னார்ட் தனது வேலை மிகவும் சலிப்பாக (போராக) இருந்தது. போரடித்த வேலை காரணமாக அது என்னை மனச்சோர்வுக்கு ஆளாக்கியது. மனதளவில் மிகவும் பாதிப்பை உண்டாக்கி வரும் இந்த வேலையை விட்டுவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது தவிர தான் ஒரு முக்கியமான வாடிக்கையாளரை இழந்த பிறகு, எனது வேலை லெவலில் இருந்து தரமிறக்கப்பட்டேன். இதன் பின்னர் அலுவலகத்தில் எனக்கு சிறிய பணிகளே ஒதுக்கப்பட்டன.

நிறுவனத்தின் இந்த செயலால் இனி எனக்கு எதற்கும் ஆற்றல் இல்லை என்ற அளவில் முத்திரை குத்தப்பட்டேன். ஒரு பெரிய வேலையையும் செய்யாமல் சம்பளம் வாங்கும் குற்ற உணர்ச்சியும் வெட்கமும் அடைந்தேன். இதனால் எனது மனநலம் மோசமடைந்த போது மருத்துவர்கள் பரிந்துரைத்ததால் 6 மாதங்களுக்கு விடுப்பு எடுத்தேன். எனினும் இறுதியில் நிறுவனத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டேன் என்று கூறி இருந்தார். வழக்கு விசாரணையின் போது டெஸ்னார்ட்டின் வழக்கறிஞர் அவர் ‘போர்-அவுட்’ எனப்படும் ஒரு நிலையை அனுபவித்ததாகக் குறிப்பிட்டார். இது கடுமையான சலிப்பு நிலை, இது மனச்சோர்வுக்கு வழிவகுக்கும்.

வழக்கை விரிவாக விசாரித்த நீதிமன்றம் டெஸ்னார்ட்டின் உடல்நிலை மோசமடைந்ததற்கும் அவரது பணியில் ஏற்பட்ட மாற்றங்களுக்கும் இடையே உறுதியான தொடர்பு இருப்பதை உணர்வதாக குறிப்பிட்டது. ஏற்கனவே கீழமை நீதிமன்றம் டெஸ்னார்ட்டிற்க்கு ஆதரவாக தீர்ப்பளித்திருந்த நிலையில், சமீபத்தில் பாரிஸ் மேல்முறையீட்டு நீதிமன்றம் அந்த தீர்ப்பை உறுதி செய்து டெஸ்னார்ட்டிற்கு 40,000 யூரோக்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.33,83,107 வழங்க உத்தரவிட்டு உள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு desk job ஊழியர்களுக்கு நிச்சயமாக நிறைய நம்பிக்கையை அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *