• Mon. Jun 5th, 2023

நடுரோட்டில் டேங்கர் லாரியில் இருந்து வெளியேறிய கார்பன்டைஆக்ஸைடு..,

Byவிஷா

Apr 28, 2023

கோவை அருகே டேங்கர் லாரி மீது மற்றொரு லாரி மோதியதில், கார்பன்டை ஆக்ஸைடு வெளியேறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் இருந்து கோவை மாவட்டத்திற்கு சோடா தயாரிக்கும் தொழிற் சாலைக்கு டேங்கர் லாரி மூலம் கார்பன் டை ஆக்சைடு எனப்படும் கரியமில வாயுவை ஏற்றிக்கொண்டு கோவை நோக்கி வந்து கொண்டிருந்தது.
அப்போது, திருச்சூர்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் வட்டப்பாரா என்னும் இடத்தில் வந்து கொண்டு இருந்த டேங்கர் லாரி மீது பின்னால் காய் கறி ஏற்ற வந்த மினி லாரி மோதியது. இதனால், டேங்கர் லாரியின் பின்புற குழாய் வெடித்து கரியமில வாயு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. எரிவாயு கசிவு காரணமாக கோவை – திருச்சூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் எரிவாயு கசிவை கட்டுப்படுத்த தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். ஆனால், தீயணைப்புத் துறையினர் கட்டுப்படுத்தும் முன்பே, டேங்கர் லாரியில் இருந்து கரியமில வாயு முற்றிலும் வெளியேறியது. சுமார் 2 மணி நேரம் கழித்து போக்குவரத்து சரி செய்யப்பட்டு வாகனங்கள் அனுமதிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக வாளையாறு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *