• Sun. Apr 12th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தின் வரலாறு அறியாமல் நாட்டின் வரலாற்றை தெரிந்து கொள்ள முடியாது: ராகுல் பேச்சு

ஸ்டாலின் சுயசரிசையான ‘உங்களில் ஒருவன் நூல் ‘வெளியிட்டு சென்னை விழா நந்தம்பாக்கத்தில் இன்று நடந்தது.

இதில் காங்., எம்.பி., ராகுல் பங்கேற்றார்.ஆங்கிலத்தில் ராகுல் பேச்சை தி.மு.க., எம்.பி., திருச்சி சிவா மொழிபெயர்த்தார். ராகுல் பேசியது ,இந்த விழாவில் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.தமிழ்நாட்டிற்கு வருகை தருவது எனக்கு எப்போதும் மகிழ்ச்சியானதே. ‘உங்களில் ஒருவன் என்ற அருமையான புத்தகத்தை வழங்கி இருக்கிறார் ஸ்டாலின். தமிழக முதல்வராக தமிழ்நாட்டு மக்களுக்கு ஏராளமான நன்மைகளை செய்து வருகிறார் .

இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என பார்லிமென்டில் குறிப்பிட்டேன். அடிக்கடி தமிழ்நாடு குறித்து பார்லி.யில் பேசினேன். ஏன் என்று கேட்ட போது, நான் என்னை அறியாமல் நான் தமிழன் என கூறினேன். நான் இந்த மண்ணுக்கு வரும்போதெல்லாம் பணிவான குணத்துடன் வருகிறேன்.

ஏனென்றால் இந்த மண்ணில் எனது ரத்தம் கலந்துள்ளது. எனது ரத்தம் தமிழக மண்ணில் கலந்துள்ளதால் தமிழன் என்றேன். தமிழகத்தின் வரலாற்றை தெரிந்து கொள்ளாமல் நாட்டின் வரலாற்றை தெரிந்து கொள்ள முடியாது. தமிழர்களிடம் அன்புடன், பரிவுடன் பேசினால் அவர்கள் எதையும் தருவார்கள். ஸ்டாலின் இளமை ரகசியம் குறித்து அடுத்த புத்தகத்தில் வெளியிட வேண்டும். இவ்வாறு ராகுல் பேசினார்.