• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கள்ள சந்தையில் மது விற்பதாக அமைச்சரிடம் பெண்கள் புகார்..,

ByS.Ariyanayagam

Apr 11, 2026

கள்ளச் சந்தையில் மது விற்பதாக பெண்கள் புகார் கூறியதால் அமைச்சர் டென்ஷனாகி உடனடியாக நடவடிக்கை எடுக்க கட்சிக்காரர்களுக்கு உத்தரவிட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தாடிக்கொம்பு, பூதிபுரம் பகுதியில் அமைச்சரும் ஆத்தூர் தொகுதி வேட்பாளருமான ஐ.பெரியசாமி பிரச்சாரம் செய்தார்.

அப்போது பிரச்சாரத்தின் போது பெண்கள் பூதிப் புரம் பகுதியில் கள்ள சந்தையில் டாஸ்மாக் மது விற்பனை செய்வதாக புகார் தெரிவித்தனர். இதனால் ஆத்திர மடைந்த அமைச்சர் ஐ.பெரியசாமி முன்னாள் அகரம் பேருராட்சி தலைவர் நந்தகோபால் என்ற மணி மற்றும் ஒன்றிய செயலாளர் செழியன் ஆகியோரை கடுமையாக சாடினார். உடனடியாக சில்லிங் பாயிண்டை அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.

பின்னர் தாடிக்கொம்பு பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் ஐ.பெரியசாமி முதல்வர் கூறியதை சுட்டி காட்டி 8 ஆயிரம் ரூபாய் டோக்கனை பெண்கள் வீட்டுக்காரரிடம் கொடுக்க வேண்டாம் என தெரிவித்தார்.