• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த ஏவிசிசி கணேசன்..,

Byமுகமதி

Apr 11, 2026

புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராமச்சந்திரனை ஆதரித்து பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு உறுப்பினர் ஏவிசிசி கணேசன் தலைமையில் புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட தொண்டைமான் நகர் திலகர் திடல் மற்றும் மேல மூன்றாம் வீதி பகுதியில்
கொளுத்தும் வெய்யிலில் பிரச்சார வாகனத்துடன் சென்று “வளமான தமிழகம்
வலிமையான பாரதம்”என்கிற பதாதகையை ஏந்தியபடி மோடிஜி அரசின் சாதனை விளக்கப் பிரசுரங்களையும் தாமரை மலர்களையும் வீடுவீடாக வழங்கி
தாமரை சின்னத்திற்கு பாஜகவினர் வாக்கு சேகரித்தனர்.

பாஜக மாவ‌‌ட்ட செயற்குழு மூத்த உறுப்பினர் சுப்பிரமணிய நாட்ராயர் முன்னிலை வகித்தார். சக்தி கேந்திர பொறுப்பாளர் சிவ இளங்கோ மற்றும் பூத்கமிட்டி உறுப்பினர்கள் கிளைத் தலைவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.