• Sat. Mar 25th, 2023

இனி சேர வாய்பில்லையா? – ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் அடுத்த நடவடிக்கை!

தமிழ் சினிமாவுல்ல முன்னணி நடிகரான தனுஷ் கடந்த 2004-ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தோட மூத்த மகளான ஐஸ்வர்யாவ திருமணம் செஞ்சுக்கிட்டாரு!

இவங்களுக்கு யாத்ரா, லிங்கா என ரெண்டு பசங்க இருக்காங்க! இந்த நிலையில திருமணமாகி 18 ஆண்டுகள் கழிச்சு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து பெற்று பிரிய போவதா சமீபத்துல அறிவிச்சாங்க!

இது எல்லாருக்குமே அதிர்ச்சிய ஏற்படுத்துச்சு! ஆனா, தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் அவரவர் வேலைகள்-ல்ல பிஸியா இருந்துட்டு வராங்க! இதுக்கிடையில, தனுஷ்-ஓட அண்ணன் செல்வராகவனுக்கு ஐஸ்வர்யா இன்ஸ்டாகிராம் பக்கத்துல பிறந்தநாள் வாழ்த்து சொல்லி இருந்தாங்க. அப்டி இருக்க, தனுஷ் ஐஸ்வர்யா இயக்கிய ‘பயணி’ ஆல்பம் பாடல பகிர்ந்து, ‘தோழி ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துகள்’ அப்டினு பதிவு செஞ்சிருந்தாரு! அதற்கு ஐஸ்வர்யாவும் ‘நன்றி தனுஷ்’ -ன்னு சொல்லி இருந்தாங்க! அப்புறம், தன்னோட சகோதரி சௌந்தர்யா ரஜினிகாந்த் கூட இருக்குற போட்டோவயும் ஷேர் செஞ்சு இருந்தாங்க!

இந்நிலையில இது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரெண்டு பேரும் மீண்டும் சேர அறிகுறி-ன்னு பலரும் சொன்னாங்க! ஆனா, அவங்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில தன்னோட ட்விட்டர் பக்கத்தில தனுஷோட பேர சேர்ந்திருந்த ஐஸ்வர்யா அத எடுத்துட்டு, ஐஸ்வர்யா ரஜினிகாந்த்-ன்னு மாத்தி இருக்காங்க! அதே மாதிரி இன்ஸ்டாகிராம் -ல்லயும் நீக்கிருக்காங்க! இதனால இவங்க ரெண்டு பெரும் இனி சேருவாங்க அப்டிங்குற நம்பிக்கைய இழந்து இருக்காங்க ரசிகர்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *