ஆதம்பாக்கத்தில் திருமணம் நின்ற விரக்தியில் உறவினர்கள் வீட்டு கார்கள் இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கிய கஞ்சா போதை வாலிபரின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு.
ஆதம்பாக்கம் கக்கன் நகர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் புவனேஷ். இவருடைய அண்ணன்கள் கிஷோர், தருண் ஆகியோர் இவரின் வீட்டின் அருகே தனித்தனி வீட்டில் வசித்து வருகின்றனர். இன்று அதிகாலை சுமார் 5:30 மணி அளவில் இவருடைய வீட்டின் வெளியே கார் கண்ணாடிகள் உடைக்கும் சத்தம் கேட்டது. உடனடியாக புவனேஷ் அலறிக்கொண்டு வெளியே சென்று பார்த்தபோது, வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடிகள் மற்றும் கார் முன்புறம், பின்புறம் முழுவதுமாக அடித்து நொறுக்கப்பட்டிருந்தது.

மேலும் இவர்களுடைய அண்ணன்கள் வீட்டிலேயும் இருந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தகவல் அளித்தார். தகவலின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்தனர். அப்போது அவர்களுடைய வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, அதில் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் 5 அடி உயரமுள்ள இரும்பு ராடால் கார்கள், இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இது குறித்து புவனேஷ் போலீசாரிடம், அந்த வாலிபர் புகழேந்தி/ 28 தன்னுடைய தூரத்து உறவினர் என்று தெரிவித்தார். மேலும் புகழேந்திக்கு திருமணம் செய்வதற்கு அவருடைய உறவினர்கள் யாரும் முன் வராததால் தன்னுடைய அப்பா ஆனந்தன் தான் புகழேந்திக்கு பெண் பார்த்து நிச்சயதார்த்தம் செய்து வைத்தார். இதில் புகழேந்தினுடைய நடவடிக்கைகள் சரி இல்லை என்று பெண் வீட்டார் திருமணத்தை நிறுத்திவிட்டனர் .
இதனால் புகழேந்தியுடைய திருமணம் நிச்சயதார்த்த உடன் நின்று விட்டது. மீண்டும் தனக்கு திருமணம் செய்து வையுங்கள் என்று புகழேந்தி அடிக்கடி என் அப்பாவை தொந்தரவு செய்து வந்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு திருமணம் நின்றதற்கு நாங்கள் தான் காரணம் என்று புகழேந்தி எங்களிடம் அடிக்கடி சண்டை போட்டு வந்தார். கடந்த மூன்று நாட்கள் முன்பு தான் வெளியே செல்லும்போது கஞ்சா போதையில் வந்த புகழேந்தி தன்னை அடித்து வலது கையை உடைத்ததாகவும் கூறினார். .தற்போது புவனேசுடைய வீடு மற்றும் அவருடைய அண்ணன்கள் வீடுகளில் புகுந்து புல்லட் மற்றும் இரண்டு கார்களை முழுவதுமாக அடித்து நொறுக்கியுள்ளார். மேலும் ஆனந்தன் குடும்பத்தாரை யாரும் விடமாட்டேன் என்று புகழேந்தி சபதம் எடுத்து உள்ளதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.