• Sun. Oct 11th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

தம்பதியாக ஜோடி போட்டு ஜெயித்த வேட்பாளர்கள்…

Byகாயத்ரி

Feb 22, 2022

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகளை அறிவித்து வருகின்றனர்.வாக்கு எண்ணிக்கையில் திமுக அதிக இடங்களை கைப்பற்றி வெற்றிக்கொடி நாட்டியுள்ளது. இதை தொடர்ந்து ரல வேட்பாளர்கள் தம்பதிகாளாக களம் இறங்கி தேர்தலை சந்தித்தனர். அந்த வகையில் சேலம் மேட்டூர் நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட தம்பதி வெற்றி பெற்றுள்ளனர். 1-வது வார்டில் மனைவி உமா மகேஸ்வரியும், 14-வது வார்டில் கணவர் வெங்கடாசலமும் வெற்றி பெற்றுள்ளனர். அதேபோல் ராஜபாளையம் நகராட்சி 40 வது வார்டில் போட்டியிட கணவர் ஷ்யாம், 6வது வார்டில் போட்டியிட்ட மனைவி பவித்ரா இருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.