• Wed. Mar 29th, 2023

வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு ரத்து செல்லும்-உச்சநீதிமன்றம்

Byகாயத்ரி

Mar 31, 2022

தமிழக அரசு கொண்டு வந்த வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் வன்னியர் பிரிவினருக்கான 10.5சதவீத உள்ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. இதற்கு எதிராக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில் உள்ஒதுக்கீடை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை தொடர்ந்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இடஒதுக்கீடு தொடர்பாக மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை தற்போது விசாரித்த உச்சநீதிமன்றம், மாநில அரசு உள்ஒதுக்கீடு வழங்க உரிமை இருந்தாலும், சரியான காரணம் தேவை என்றும், இந்த இடஒதுக்கீட்டில் சரியான காரணங்கள் இல்லை என கூறி, உயர்நீதிமன்ற கிளை இடஒதுக்கீடுக்கு விதித்த தடை செல்லும் என்று உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *