• Fri. Apr 26th, 2024

காட்டெருமைக்கு சிகிச்சை அளிக்கப்படுமா?

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த மெர்லாண்டு கைகாட்டி பகுதியில் சாலை ஓரமாக கடந்த ஏழு நாட்களாக உடல் சோர்வுடன் காணப்படும் காட்டெருமை வனத்துறைக்கு சமூக ஆர்வலர்கள் தகவல் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை. உதகை மஞ்சூர் முக்கிய சாலையாக கருதப்படுவதால் சாலைகளில் உடல் நலம் குன்றி அங்கும் இங்குமாக சோர்வடைந்த நிலையில் உணவு உட்கொள்ளாமல் மெலிந்து வரும் காட்டெருமை இரவு நேரங்களில் வாகனங்களில் அடிப்படும் அபாயம் உள்ளது. அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் நூற்றுக்கும் மேற்பட்ட காட்டெருமை கூட்டங்கள் அப்பகுதியில் நடமாடி வருகிறது.

அவ்வப்போது வாகனங்களை காட்டெருமை கூட்டங்கள் வழி மறித்தும் வருகின்றன. காட்டெருமை கூட்டத்திலிருந்து பிரிந்து உடல்நலம் சரியில்லாமல் சாலையிலே தஞ்சமடைந்து கிடக்கும் காட்டெருமைக்கு உரிய சிகிச்சை அளித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *