• Mon. Apr 29th, 2024

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் குந்தா பாலம் பகுதியில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான மரங்களை தொடர்ந்து அனுமதியின்றி வெட்டி தனியார் தொழிற்சாலைக்கு விற்று பணம் சம்பாதித்து வரும் நபர் அதிகாரிகளின் அலட்சியத்தால் தொடரும் மரக்கடத்தல்.


குந்தா பாலம் பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவர் சாலை ஓரங்களில் உள்ள சீகை மரம் காட்டு மரங்களை அவ்வப்போது எந்த ஒரு அனுமதியும் இன்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கவனிப்புக்கு பின் மரங்களை வெட்டி வருகிறார் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ராட்சச மரம் ஒன்றை வெட்டி சாலையில் வீழ்ச்சியதன் மூலம் சுமார் நான்கு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது போக்குவரத்து சீர் செய்யும் முயற்சியில் வேறு மரம் வெட்டுபவர்களைக் கொண்டு மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினார்கள் மரம் வெட்டிய சந்திரனுக்கு எச்சரித்து அனுப்பி வைத்தனர் இரண்டு நாட்கள் கழிந்த பிறகு வெட்டப்பட்ட மரங்கள் வாகனங்கள் மூலமாக தேயிலைத் தொழிற்சாலைக்கு டன் கணக்கில் விற்கப்பட்டன ஆயிரக்கணக்கில் பணமும் சம்பாதித்தார் குடியரசு தினத்தன்று நெடுஞ்சாலைத் துறை மூலமாக ஆபத்தான நிலையில் இருந்த ராட்சச மரம் ஒன்றை சாலை ஓரமாக ஜேசிபி இயந்திரம் மூலம் தள்ளி வைத்திருந்தனர் அதையும் மரம் வெட்டும் இயந்திரம் மூலம் துண்டு துண்டாக வெட்டி தொழிற்சாலைக்கு விற்கப்பட்டுள்ளது சனிக்கிழமை அன்று மாலை குந்தா பாலம் தண்ணீர் தொட்டி அருகே பெரிய சீகை மரம் ஒன்றை அடியோடு வெட்டி சாய்த்ததில் சாலையில் விழுந்து சுமார் அரை மணி நேரம் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது ஓட்டுநர்களின் தகவலின் பெயரில் விரைந்து வந்த குந்தா கிராம ஆய்வாளர் தினேஷ்குமார் உதவி ஆய்வாளர் சிவசங்கரன் சாலையில் வெட்டப்பட்டு கிடந்த மரத்தை வெட்டி சாலை ஓரமாக போடப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது நெடுஞ்சாலைத்துறைக்கு சம்பந்தப்பட்டதால் உடனடியாக RI நஞ்சுண்டன் அவர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது தொடர்ந்து அனுமதி இன்றி நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான அரசு மரங்களை வெட்டி வரும் சந்திரனை எச்சரித்து மஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது தொடர்ந்து அரசுக்கு சொந்தமான மரங்களை வெட்டி வரும் சந்திரன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவருக்கு உறுதுணையாக செயல்படுபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர் மீண்டும் வெட்டப்பட்டுள்ள மரங்களை கடத்தி விற்பனை செய்ய வாய்ப்புள்ளதால் குந்தா பாலம் பொதுமக்கள் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் இணைந்து வாகனங்கள் மூலம் மரங்கள் வெட்டப்பட்டு மஞ்சூர் காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *