• Fri. Sep 11th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தவெகா வா திமுக வா போட்டி போட்டு மதுரை விமான நிலையத்தில் கூச்சல் எழுப்பிய தொண்டர்கள்..,

ByKalamegam Viswanathan

Sep 11, 2026

மதுரை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் வந்த ஆளுங்கட்சி எதிர்க்கட்சித் தலைவர்கள் மாற்றி மாற்றி கோசம் எழுப்பி பரபரப்பை ஏற்படுத்திய தொண்டர்கள்.
இம்மானுவேல் சேகரன் 69ஆவது நினைவு தினத்தையொட்டி பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் நாளை பல்வேறு அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்த உள்ளனர்.

இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் நாளை பரமக்குடியில் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மரியாதை செலுத்த உள்ளனர். இதற்காக சென்னையிலிருந்து மதுரைக்கு வரும் கடைசி விமானத்தில் மதுரைக்கு வருகை தந்தார். எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் அவரை வரவேற்பதற்காக மதுரை விமான நிலையத்தில் ஏராளமான தமிழக வெற்றி கழக தொண்டர்கள் குவிந்தனர்.

அதே விமானத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் மதுரை வர நிலையில் அவரை வரவேற்பதற்காக ஏராளமான திமுக தொண்டர்கள் மதுரை விமான நிலையத்தில் குவிந்தனர். அசாதாரணமான சூழல் ஏற்பட்ட விட கூடாது என்பதற்காக போலீசார் இரு பக்கமாக தடுப்பு விழிகள் அமைத்து தொண்டர்களை தனித்தனியாக நிறுத்தினார். இந்த நிலையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமான நிலையத்திற்குள் இருந்து வெளியே வரவும் வெளியே காத்திருந்த தொண்டர்கள் திமுக,திமுக என கோஷம் எழுப்ப தொடங்கினர்.

அதே நேரத்தில் அமைச்சர் சிடி நிர்மல் குமாரும் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தவுடன் தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் டி வி கே, டி வி கே என கோஷம் எழுப்ப தொடங்கினர். ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தொண்டர்கள் போட்டி போட்டு திமுக டிவி கே என கோசம் எழுப்பியதால் மதுரை விமான நிலையம் பரபரப்பானது.