கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள நாக சக்தி அம்மன் தியாகபீடத்தில் அமாவாசையன்று நடைபெற்ற சத்ரு சம்ஹார பூஜை நடைபெற்றது. காளிக்கு 1008 மூல மந்திரங்கள் கூறி வழிபாடு நடத்தபட்டது.

பாபுஜி சுவாமிகள் இந்த பூஜையை மேற்கொண்டார். மனிதர்கள் துன்பங்களில் இருந்து விடுபடுவதற்கு நடைபெற்ற இந்த பூஜையில் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்தும் வெளியூர்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதில் கலந்துகொண்ட பக்தர்கள் இந்த பூஜையில் கலந்து கொண்டு அவர்களது குறைகளை கூறினால் அம்மன் அருளால் குறைகள் அனைத்தும் நிவர்த்தி அடைந்து விடுவதாக தெரிவித்துள்ளனர்.

துன்பங்களில் இருந்த விடுபட நாக சக்தியை வழிபட்டால் தீயவற்றில் இருந்து விடுபடலாம் என்றார்.








