• Wed. Apr 8th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

ByA.Tamilselvan

Nov 6, 2022

உத்தபிரதேசம்,தெலுங்கானா உட்பட 6 மாநில இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது.சில மணி நேரங்களில் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தரபிரதேசத்தில் கோலாகோரக்பூர், மகாராஷ்டிரா அந்தேரி கிழக்கு, தெலுங்கானாவில் முனு கோடு, அரியானாவில் ஆதம்பூர், ஒடிசாவில் தாம்நகர் மற்றும் பீகாரில் மோகாமா, கோபால்கஞ்ச் ஆகிய 7 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 3ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிவடைந்ததும் மின்னனு வாக்கு எந்திரங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. இந்நிலையில், இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்தபடி இன்று நடைபெறுகிறது. அதன்படி, வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னனி நிலவரம் காலை 9 மணிக்கு மேல் வெளிவரத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கையின் இறுதி முடிவு இன்று மாலைக்குள் அறிவிக்கப்படுகின்றன.