வணிக வரித்துறையில் 100-க்கும் மேற்பட்ட கடைநிலை அலுவலர்களை கோட்ட மாறுதலை செய்ததைக் கண்டித்து வணிக வரிச் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பாக தன்னெழுச்சியாக காலை 11.00 மணியளவில் மதுரை வணிக வரி வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மதுரை கோட்டத் தலைவர் அக்பர்பாட்சா மற்றும் சரவணப் பெருமாள் ஆகியோர் கூட்டாக தலைமையேற்றனர்.அலுவலர் சங்க மாநில நிர்வாகி முருகேசன், மீனாட்சி, குணாளன் ஆகியோர் கண்டன உரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத்தலைவர் சோ. நடராஜன் வாழ்த்திப் பேசி சிறப்புரையாற்றினார்.80 பெண்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இது பற்றி கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் முருகேசன் தெரிவிக்கையில் மாண்புமிகு வணிக வரித்துறை அமைச்சர் அவர்களின் தலையீட்டின் பேரில் விதிகளுக்கு முரணாக வழங்கப்பட்டுள்ள பணி மாறுதல்களை இரத்து செய்யவில்லை எனில் வேலை நிறுத்தம் வரை செல்வதைத் தவிர வேறு வழியில்லை. எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றார்.
இது குறித்து தமிழ்நாடு வணிகவரி பணியாளர் சங்கத்தின் மாநில தவைவர் ஜனார்த்தனன் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் போராட்டத்தின் நோக்கம், முதல்வர் ஒரு நேர்மையான ஆட்சியை கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறார் அது அவரின் செயல்பாடுகளிலும் தெரிகிறது, ஆனால் இன்று வணிக வரித்துறை மீது நடத்திய பணிஇடம் மாறுதல் என்பது இடம்மாற்றப்பட்ட அனைவருமே நேர்மா தவறாதவர்கள் என்று எல்லோராலும் ஏற்றகக்கொள்ளப்பட்டவர்கள்.
அது ஒரு அரசியல் தலையீட்டின் காரணமாகதான் நடந்தது என்று தெளிவாக தெரிகிறது.எங்களுடைய கேள்விகள் என்வென்றால் தாங்கள் சொல்லவதெல்லாம் செய்ய வேண்டும், அவர்கள் சொல்லும் இடங்களில் சோதனை செய்யக்கூடாது என்பதுதானா..!நேர்மையாக வேலைப்பார்த்தவர்களை இடம் மாறுதல் செய்து அசிங்கப்படுத்தி அவனமானப்படுத்தி எந்த விதமான விதிகளையும் பின்பற்றாமல் மாற்றி இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.இது இந்த ஆட்சிக்கு அவப்பெயரை உண்டாக்கும் செயல் என்பதை தமிழக முதல்வரின் கவனத்திற்கு எடுத்த செல்ல விரும்பினோம்.
அதற்காகவே இந்த ஆர்பாட்டமும் நடைபெற்றது.தமிழக முதல்வர் நாங்கள் நேர்மையான ஆட்சியை செய்ய விரும்புகிறோம் என்றால் இதில் அவர் உடனடியாக தலையிட வோண்டும்.இதில் நாங்கள் தவறான நபர்களைதான் மாற்றம் செய்தோம் என்று நினைத்தால் முறையான விசாரணையின் பேரில் எந்த நடவடிக்கை வேண்டுமானாலும் எடுக்கலாம் அதில் மாற்று கருத்து இல்லை.தாங்கள் செய்திருக்கும் இந்த செயல் நியாமானவர்களை அப்பாவிகளை இடம் மாற்றுகிறீர்கள் என்று மற்ற அதிகாரிகளுக்கும் ஒரு அச்ச உணர்வு ஏற்படுகிறது.
அதனால் முதல்வர் தலையிட்டு ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தக்கூடிய இது போன்ற நடவடிக்கைகளை அது எந்த துறையாக இருந்தாலும் நிறுத்த வேண்டும். வழங்கப்பட்ட இடம் மாறுதல்களை திரும்பப்பெற வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை.இது நிறைவேறும் என்று நம்புகிறோம் இல்லையென்றால் இன்னும் இந்த ஆர்பாட்டம் தீவுரமடையும் என்று கூறியுள்ளார்.