இராஜபாளையத்தில் நகர் மத்தியில் செயல்பட்டு வந்த இராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் ரூ.2.90 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட காந்திஜி நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையம் என பெயர் சூட்டப்பட்டு கடந்த மே மாதம் 29-ம் தேதி திறக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் மத்தியில் பேருந்து நிலையமாக கடந்த 65 ஆண்டுக்கு மோலமாக செயல்பட்டு வந்தது. சங்கரன்கோவில் செல்லும் சாலையில் புதிய பேருந்து நிலையம் 2008 செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி தற்போதைய முதல்வர்
மு க ஸ்டாலின் அப்போது உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது இந்த பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து இராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் நகரப் பேருந்துகள் மட்டும் வந்து செல்லும் அளவிற்கு செயல்பட்டு கொண்டிருந்தது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தை புதுப்பித்து பேருந்து நிலையம் கட்டுவதற்காக இராஜபாளையம் நகராட்சியில் இருந்து ரூ.2.90 கோடி நிதி ஒதுக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்ட காந்திஜி நூற்றாண்டு பேருந்து நிலைய என பெயர் சூட்டப்பட்டு மே மாதம் 29ம் தேதி வருவாய் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் இராஜபாளையம் நகர மன்ற தலைவி பவித்ரா ஷ்யாம் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் வகித்தார். இந்த பேருந்து நிலையத்தை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
புதுப்பிக்கப்பட்ட இராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தில் சுகாதார வளாகங்கள் கட்ட வில்லை குறிப்பாக ஆண் பெண்கள் சிறுநீர் கழிப்பதற்கு கூட வசதி இல்லாமல் இருப்பதாகவும் கட்டப்பட்டிருக்கும் கழிப்பறைகள் போதுமானதாக இல்லை என சிறப்புல்லாவின் அன்று அமைச்சர் கே கே சாரிடம் செய்திகளை கேட்ட பொழுது மலுப்புலான பதிலை சொல்லி நலுவி சென்று விட்டார் நகர மன்ற தலைவி கூறும் பொழுது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் கூறினார்.
ஆனால் ஒவ்வொரு நாளும் பேருந்துக்காக வரக்கூடிய பொதுமக்களும் வெளியூரில் இருந்து வரக்கூடிய பயணிகள் அவதிப்பட்டு செல்கின்றனர். கமிஷன் அடிப்பதில் கவனமாக இருக்கும் நகராட்சி நிர்வாகம் புதிதாக டெண்டர் விட்டு அதன் பின்பு கழிப்பறை கட்டுவதற்கும் முயற்சி செய்வதாக தெரிவிக்கின்றது. ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியில் கட்டாமல் புதிதாக டெண்டர் விட்டு கட்டுவதால் எவ்வளவு கமிஷன் கிடைக்கும் என்று எதிர்பார்ப்போடு அரசு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் செயல்படுவதாக சமூக ஆர்வலர்களுடைய கருத்தாக உள்ளது.
விருதுநகர் மாவட்டத்தின் மாவட்டத்தில் அமைச்சராக இருக்கக்கூடிய கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரனுக்கும் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியனுக்கும் ஏற்கனவே அமைச்சர் பதவி வாங்குவதில் கருத்து வேறுபாடு உள்ளது. அதை கருத்தில் கொண்டு அமைச்சர் இராஜபாளையம் நகராட்சியை புறக்கணிக்கிறாரா என்ற கேள்வியும் எழும்புகிறது.
திமுக சகாக்கள் சில பேர் கூறும்பொழுது தங்கப்பாண்டியன் அமைச்சராகி விடுவார் என்ற எண்ணத்தில் அவரை புறக்கணிக்கிறார். அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் எனக் கூறுகின்றனர். வேறு வழியில்லாமல் கட்சியில் இருக்கிறோம் என்ன செய்வது அதிமுக ஆட்சி காலத்தில் கூட ஏதாவது வேலைகள் செய்து நாங்களும் பணம் சம்பாதிக்க முடிந்தது. இப்பொழுது எதுவுமே இல்லை எல்லாமே மேலிடம்தான் என்று தன் ஆதங்கத்தை புலம்பித் தள்ளினர்.
இது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்டோம் அப்போது ஐயப்பன் என்பவர் கூறும் பொழுது இராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் கடந்த 65 ஆண்டுகள் மேலாக செயல்பட்டு வருகிறது. தற்போது புதுப்பிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கு அடிப்படை வசதியான பாத்ரூம் வசதிகள் இல்லை இரண்டு பாத்ரூமில் மட்டுமே உள்ளது. அதை அனைவரும் பயன்படுத்த முடியாது. பேருந்துக்கு வரும் பயணிகள் அவசரத்திற்கு சிறுநீர் கழிக்க கூட இடமில்லை நகராட்சி நிர்வாகம் கவனத்தில் கொண்டு அரசு அதிகாரிகளும் விரைவாக செயல்பட்டு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.
அதேபோல் இராஜபாளையம் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கு அரசு மகப்பேறு மருத்துவமனை முன்பு நிற்கும் மினி பேருந்து மற்றும் பேருந்துகளை பழைய பேருந்து நிலையம் உள்ளே வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். பழைய பேருந்து நிலையம் அருகே மதுரை தேனி விருதுநகர் செல்லக்கூடிய புறநகர் பேருந்துகள் உள்ளே வந்து பயணிகணிகளை ஏற்றிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் பேருந்து நிலையம் உள்ள கடைகளை திறந்து பயணிகள் தேவையான பொருள் கிடைக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்தார்.