• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பெண் மீது பேருந்து ஓட்டுநர் தாக்குதல்!!

அரசு பேருந்தை எடுப்பதற்கு தாமதமானதால், அதனை கேட்ட பெண் மீது ஓட்டுநர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

சென்னை பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த முருகம்மா என்பவர் தனது கணவர் செந்திலுடன் பாரிமுனை செல்ல பெரும்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு அதிகாலை 5 மணிக்கு சென்றார். காலை 5.10க்கு புறப்பட வேண்டிய பேருந்தை 5.30 வரை எடுக்காமல் ஓட்டுநர் காலதாமதம் செய்துள்ளார். இதனால், பொறுமை இழந்த முருகம்மா ஓட்டுநரிடம் கேட்டுள்ளார்.

அதற்கு ஓட்டுநர் ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால், ஒட்டுநருக்கும் முருகம்மாளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கணவர் செந்தில், முருகம்மாளை ஓட்டுநர் மற்றும் நடத்துனர் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் முருகம்மாள் நிலைக்குழைந்து கீழே விழுந்து மயக்க நிலைக்கு சென்றார். இதனை பார்த்த பொதுமக்கள் பேருந்து நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிகழ்விடத்திற்கு சென்ற போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனிடையே, அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பெண் பயணி முருகம்மாளை சரமாரியாக தாக்கிய காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.