• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பெண் குழந்தையை மேலோங்கி பார்த்த புத்தர்!!

ByAlaguraja Palanichamy

Aug 8, 2022

பெண் குழந்தைகளை பிரியமாய் நேசித்தவர் பகவான் புத்தர்.ஒருமுறை அவர் ஷ்ராவஸ்தியில் கோசல மன்னன் பசேந்தி புத்தரிடம் உரையாடிக் கொண்டிருக்கையில் அவனுக்கு மகள் பிறந்த செய்தி அறிந்து தளர்வுற்றான்.

அதை கண்ட புத்தர் அவனிடத்தில் “ஆண்குழந்தையை விடப் பெண் குழந்தை சிறந்த பெறுமதியாய் எச்சமாய் திகழக்கூடும். ஏனெனில் அவள் அறிவுற்று ஒழுக்கமுடையவளாய் வளர்ந்து பிறராலும் மகளெனப் புகழ்பெறக்கூடும். அவளாள் ஈன்றெடுக்கப்படும் ஆண் மகவு பெருஞ்செய்கள் புரிந்து போரசை ஆள்வதோடு இத்தகைய நன்மனைவியால் ஈன்றெடுக்கப்பட்ட மகன் நாட்டை வழிநடத்துவது என்பது (மனித குலத்திற்கு) சிறப்பானது அன்றோ என்றார் .

இது பெண் பிள்ளைகள் விழிப்புணர்வு அடைந்து விட்டால் அதை சமூகப்படுத்த கடுமையான முயற்சிகளை அவர்கள் முன்னேடுத்தால் மாந்த குலம் மனிதநேயத்தை முழுமையாக நிலைநிறுத்திவிட முடியும் என்பது புத்தரது நம்பிக்கை என்றே கருத வேண்டியுள்ளது. அந்த கடுமையான முயற்ச்சியின் வெளிப்படுதான் தன்னை நேசித்த தான் நேசிக்கும் ஞானகுருவின் தோளின் மேல் ஏறி இந்த உலகிற்கு பறைசாற்றுகிறாள் அந்த சிறுமி. இதை அடுத்த காட்சியமைபுடன் இணனத்து தான் புரிந்து கொள்ள முடியும்.