• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சென்னையில் நவீன வசதிகளுடன் பிராட்வே பேருந்துநிலையம்

Byவிஷா

May 21, 2024

சென்னை பிராட்வேயில் நவீன வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம் அமைக்க சென்னை மாநகராட்சி 823 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

நவீன வசதிகளுடன் வணிக வளாகத்துடன் கூடிய பேருந்து முனையமாக பிராட்வே பேருந்து நிலையம் கட்டப்பட உள்ளது. தினமும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்லும் பிராட்வே பேருந்து நிலையத்தை இடித்து புதிதாக கட்ட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
பிராட்வேயில் நவீன வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம் அமைக்க சென்னை மாநகராட்சி ரூ. 823 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. பிராட்வே பேருந்து நிலையத்தை இடிக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் தற்போது இந்த பேருந்து நிலையத்தின் மாதிரி புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.