• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றம் திருநகரில் பாலம் கட்டுமானப் பணி நிறுத்தம்..,

ByKalamegam Viswanathan

Jun 25, 2026

திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட திருநகர் அருகில் உள்ள எஸ் ஆர் வி நகர், அமைதிசோலை, லயன் சிட்டி, ஏஸ் ஆர் வி நகர் ஆகிய பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர்

திருநகரில் இருந்து இந்த பகுதிளுக்கு செல்ல நிலையூர் பாசன கால்வாயின் குறுக்கே பாலம் கடந்த ஆட்சியில் கட்டப்பட்டது. விரிவாக்க பகுதியான லயன் சிட்டி, அமைதிச்சோலை, ஏஸ் ஆர் வி நகர் ஆகிய பகுதிகள் வேகமாக வளர்ச்சியடைந்து வருவதால் இங்கு வசிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.

இதனால் இந்த பாலத்தை கடந்து செல்லக்கூடிய வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து. இதனைத்தொடர்ந்து பாலத்தின் உறுதிதன்மையை அதிகரிக்கும் விதத்தில் அதே இடத்தில் புதிய பாலம் கட்ட கடந்த திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டது.

இந்த நிலையில் திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக எந்தவொரு பணியும் நடைபெறாமல் உள்ளது. இதனால் இந்த பாலத்தை கடந்து செல்லக்கூடியவர்கள் கண்மாய் பகுதியில் இறங்கி செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.

மேலும் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் கடும் சிரமத்திற்கு ஆளாக நேரிடுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் அடுத்த மூன்று மாதங்களில் பருவ மழை பெய்தால் இப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் முடங்கிவிடும் அபாயம் உள்ளதாகவும். அதற்குள் இந்த பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.