• Sun. Jan 4th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

விநாயகர் சிலைகள் உடைப்பு; போலீசார் குவிப்பு!

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி வரும் 10ம் தேதி கொண்டாடப்படும் நிலையில், குமரி மாவட்டத்தின் பல்வேறு சாலை ஓரங்களில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

நாகர்கோவில் வடசேரி பகுதியில் வட நாட்டை சேர்ந்தவர்கள் விநாயகர் சிலைகளை செய்து விற்பனைக்காக வைத்திருந்த நிலையில், அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் குடிபோதையில் வந்து வடநாட்டு வியாபாரிகளிடம் தகராறில் ஈடுபட்டு சிலைகளை உடைந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, விநாயகர் சிலை உடைக்கப்பட்ட தகவல் கிடைத்ததும் இந்து அமைப்பினர் மற்றும் பாஜக நிர்வாகிகள் சம்பவ இடத்தில் குவிந்ததால் பரபரப்பு நிலவியது. இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், விநாயகர் சிலையை உடைத்த அடையாளம் தெரியாத நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து இந்து அமைப்பினர் கலைந்து சென்றனர். பதற்றத்தை தணிக்கும் விதமாக அப்பகுதியில் தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.