• Sat. Oct 12th, 2024

கருவில் இருக்கும் குழந்தைக்கு மூளை அறுவை சிகிச்சை..!

ByA.Tamilselvan

May 5, 2023

உலகில் முதல் முறையாக அமெரிக்க டாக்டர் குழுவினர் கருவில் இருக்கும் ஒரு குழந்தைக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்து உள்ளனர்.
அமெரிக்காவில் இருக்கும் ஒரு கர்ப்பிணி பெண் பாஸ்டன் குழந்தைகள் மருத்துவ மனைக்கு பரிசோதனைக்காக சென்றார்.குழந்தையின் வளர்ச்சி எப்படி உள்ளது என்பதை அறிய டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். இந்த சோதனையில் மூளையில் இருந்து இதயத்துக்கு ரத்தத்தை எடுத்து செல்லும் ரத்த நாளம் சரியாக வளர்ச்சி அடையாமல் இருந்தது தெரிய வந்தது. இது வீனஸ் ஆப் கேலன் என்ற குறைபாடாகும். இந்த குறைபாட்டினால் ரத்த ஓட்டத்தை மெதுவாக்கும். ரத்தம் நுண் குழாய்களுடன் நேரடியாக இணைவதற்கு பதிலாக நேரடியாக நரம்புகளுடன் இணையும். இதன் காரணமாக நரம்புகளுக்குள் அதிக ரத்த அழுத்தத்தை உருவாக்கும். நரம்புகளில் இந்த கூடுதல் ரத்த அழுத்தம் ஏற்படும் போது பல பிரச்சினைகள் உருவாகும். மேலும் இதயம் செயல் இழப்பு மற்றும் மூளை பாதிப்பு ஏற்பட்டு உயிர் இழக்கும் அபாயமும் உள்ளது.
மிகவும் அரிய வகை நோயான இந்த குறைபாட்டை ஆபரேஷன் மூலம் சரிசெய்ய டேரன் ஆர்பாக் தலைமையிலான டாக்டர் குழுவினர் முடிவு செய்தனர். அந்த குழந்தையை கருவிலேயே காப்பாற்ற டாக்டர்கள் நடவடிக்கை எடுத்தனர். மிகவும் சவாலான இந்த மூளை அறுவை சிகிச்சையினை டாக்டர் குழுவினர் ஒரு ஊசி மூலம் வெற்றிகரமாக நடத்தினார்கள். உலகில் முதல் முறையாக இந்த ஆபரேஷனை அமெரிக்க டாக்டர் குழுவினர் செய்து சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *