
சென்னை கோபாலபுரம் குத்துச்சண்டை மைதானத்தில் மாநில அளவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் புதுக்கோட்டையைச் சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனைகள் இரண்டு பேர் வெள்ளி பதக்கங்கள் பெற்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தனர். அவர்களை பாராட்டும் விதத்தில் மன்னர் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடை பயிற்சி ஈடுபடும் நடைபயிற்றுநர்கள் சால்வை அணிவித்து புத்தகம் வழங்கி விளையாட்டு வீராங்கனைகளை ஊக்கப்படுத்தினர்.
புதுக்கோட்டை மன்னர் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் சாம்பியன்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில், 30க்கு மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் குத்துச்சண்டை பயிற்சி பெற்று வருகின்றனர். இங்கே குத்துச்சண்டை பயிற்சி பெற்று வரும் வீராங்கனைகள் மாவட்ட மாநில தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில் கடந்த 10ம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை சென்னை கோபாலபுரத்தில் உள்ள குத்துச்சண்டை மைதானத்தில் நடைபெற்ற ஜூனியர் மாநில அளவிலான ஆண்கள், பெண்கள் குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ஏராளமான குத்துச்சண்டை வீரர் வீராங்கனைகள் பங்கேற்ற நிலையில் புதுக்கோட்டை சாம்பியன்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சி பெற்று வரும் வீராங்கனைகள் 5 பேர் சென்னையில் நடைபெற்ற குத்து சண்டை போட்டியில் கலந்து கொண்ட நிலையில் இதில் 70 முதல் 75 எடை பிரிவில் போட்டியிட்ட
சூரிய பிரபா வெள்ளி பதக்கமும் 66 முதல் 70 வரை இடை பிரிவில் போட்டியிட்ட
தமிழரசி வெள்ளி பதக்கம் பெற்றனர் மேலும் இதில் கலந்து கொண்ட ஹேமறியா
கரண், விக்னேஷ் மாநிலப் போட்டியில் கலந்து கொண்டதற்கான தகுதி சான்றிதழை பெற்றுக் கொண்டனர். இந்நிலையில் மாநில போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டு விதத்தில் புதுக்கோட்டை குத்துச்சண்டை கழகத்தின் மாவட்ட தலைவர் எஸ் வி எஸ் ஜெயக்குமார் மற்றும் மன்னர் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடை பயிற்சியில் ஈடுபடும் நடை பயிற்றுநர்கள் சார்பில், விளையாட்டு வீராங்கனைகளை மற்றும் பயிற்றுனர் காதர் உள்ளிட்டோரை பாராட்டு விதத்தில் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தும் புத்தகங்கள் வழங்கியும் விளையாட்டு வீராங்கனைகளை பாராட்டி சிறப்பித்தனர். இந்த நிகழ்வில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொதுச் செயலாளர் மன்றம் சண்முகநாதன் பேராசிரியர் விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
