தமிழகத்தில் வரும் 24 ம் தேதி 50 முகாம்களில் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி நடைபெறவுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
கோவையில் கொரோனா பரவுல் குறித்து ஆய்வுக்காக சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம்
பேசும் போது :- தமிழகத்தில் விமான நிலையங்கள் உள்ள சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நகரங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக குரங்கு அம்மை பாதிப்புக்குள்ளான நாடுகளில் இருந்து வருபவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.
கேரளா-தமிழகம் இடையே பொள்ளாச்சி, வாளையாறு உள்பட 13 இடங்களில் தரைமார்க்கமாக கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வந்து செல்வோரை சோதனை மையம் அமைத்து கண்காணித்து வருகிறோம். குறிப்பாக குழந்தைகளுக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு அதிகமாக இருப்பதால் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம்.பூஸ்டர் தடுப்பூசி அனைவருக்கும் இலவசமாக போடப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. நேற்றுமுன்தினம் ஒரே நாளில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. வருகிற 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்த உள்ளோம். அதில் அதிகமாக பூஸ்டர் தடுப்பூசியை போடும் பணியை செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.