சங்கிகள் வழக்கம் போல உண்மையை திரித்து மதக்கலவரத்தை தூண்ட முயலுகிறார்கள் சொந்த வீட்டுக்குள்ளேயே குண்டு வீசி விளம்பரம் தேடும் சங்கிகளுக்கு இந்த தரமற்ற செயல் புதிதல்ல என திமுக ஐடி விங் செயலாளர் டி.ஆர்.பி.ராஜா ட்வீட் செய்துள்ளார்.
சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று அதிகாலை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்களை வீசியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வினோத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்திய விசாரணையில், தமிழகத்தில் நீட் தேர்வு தொடர்பாக பாஜகவின் நிலைபாட்டை கருத்தில் கொண்டு ஆத்திரத்தில் 3 பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை வீசியதாக காவல்துறை தெரிவித்தனர்.
இதுகுறித்து, திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் டி.ஆர்.பி.ராஜா அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பாஜக அலுவலகத்தில் குண்டு வீசிய குற்றவாளி கருக்கா வினோத், த/பெ மணி,சங்கிகள் வழக்கம் போல உண்மையை திரித்து மதக்கலவரத்தை தூண்ட முயலுகிறார்கள் சொந்த வீட்டுக்குள்ளேயே குண்டு வீசி விளம்பரம் தேடும் சங்கிகளுக்கு இந்த தரமற்ற செயல் புதிதல்ல.குற்றவாளி இரவே கைது செய்யப்பட்டுள்ளார்.’ என பதிவிட்டுள்ளார்.

