
காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவ கல்லூரி நிர்வாகத்தின் மின்னஞ்சலுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனை அடுத்து காரைக்கால் போலீசாருக்கு தகவல் அளித்ததின் பேரில் 50க்கும் மேற்பட்டோர் போலீசார் மருத்துவக் கல்லூரியில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் காரைக்கால் ஜிப்மர் மருத்துவ கல்லூரிக்கு மூன்றாவது முறையாக மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வருவது குறிப்பிடத்தக்கது.
