

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர் கொரோனாவால் பாதிக்கப்படுவது இது 2வது முறையாகும். மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது மீண்டும் அமிதாப்பச்சனுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்பட்டுள்ளது. பலரும் அவர் மீண்டு வர பிரார்த்தனை செய்து வகுகின்றனர்.
