• Wed. Mar 4th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

நடிகர் விஜய் உடன் கெஸ்ட் ரோலில் இணையும் பாலிவுட் நடிகை..!

Byவிஷா

Jun 24, 2022

நடிகர் விஜய்யின் ஆஸ்தான இயக்குனரான அட்லீயின் பாலிவுட் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிகர் விஜய்யுடன் கெஸ்ட் ரோலில் பாலிவுட் நடிகை இணையப் போவதாக சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
விஜய் தற்போது வம்சி இயக்கத்தில், வாரிசு படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மேலும் இப்படத்தை அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடிக்கின்றார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு இவர்கள் மீண்டும் இணைவதாலும், லோகேஷின் சமீபத்திய படமான கமலின் விக்ரம் மாபெரும் வெற்றி என்பதாலும் தளபதி 67 படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு வாரிசு படம் முடிந்தவுடன் துவங்கப்படும். இந்நிலையில் விஜய்யின் ஆஸ்தான இயக்குனரான அட்லீ தற்போது பாலிவுட் சூப்பர்ஸ்டாரான ஷாருக்கானை இயக்கவுள்ளார். இப்படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்கின்றார். மேலும் இப்படத்தில் பிரபல பாலிவுட் முன்னணி நடிகையான தீபிகா படுகோன் கெஸ்ட் ரோலில் நடிப்பதாக தகவல் வந்துள்ளது. இந்நிலையில் அட்லீ மற்றும் ஷாருக்கான் படத்தில் தளபதி விஜய் கெஸ்ட் ரோலில் நடிப்பதாக பல நாட்களாக பேசப்பட்டு வருகின்றது. எனவே விஜய்யும் பாலிவுட் நாயகியான தீபிகா படுகோனும் இணைந்து அட்லீயின் பாலிவுட் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் வாய்ப்பு அதிகம் என சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.