• Fri. Apr 26th, 2024

கூட்டுறவு வங்கிகளிலும் இனி வீட்டுக்கடன்: ரிசர்வ் வங்கி உத்தரவு..!

Byவிஷா

Jun 24, 2022

நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் வழங்கும் வீட்டுக் கடன்களின் வரம்பை இருமடங்காக உயர்த்தி ரிசர்வ் வங்கி நேற்று உத்தரவிட்டுள்ளது.

இதன்படி இனி முதல் நிலை (Tier - I) நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் 60 லட்சம் ரூபாய் வரையும், இரண்டாம் நிலை (Tier - II) நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் 1.4 கோடி ரூபாய் வரையும் வீட்டுக் கடன் வழங்கலாம் என ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் நடைபெற்ற ரிசர்வ் வங்கி கொள்கை கூட்ட அறிவிப்புகள் ஜூன் 8ஆம் தேதி வெளியானபோது, கூட்டுறவு வங்கிகள் வழங்கும் வீட்டுக் கடன் வரம்பு உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக தற்போது நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் வழங்கும் வீட்டுக் கடன் வரம்பை அதிகாரப்பூர்வமாக உயர்த்தி அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கி. இதற்கு முன்பு 2011ஆம் ஆண்டில்தான் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் வழங்கும் வீட்டுக் கடன் வரம்பு உயர்த்தப்பட்டது.
அண்மையில் வீடுகளின் விலை உயர்ந்து வருவதாலும், வாடிக்கையாளர்களின் தேவையை கருத்தில் கொண்டும், கூட்டுறவு வங்கிகள் வழங்கும் வீட்டுக் கடன் வரம்பு உயர்த்தப்படும் என ஜூன் 8ஆம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. 
இதையடுத்து தற்போது வீட்டுக் கடன் வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.    மேலும், நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் வீட்டுக் கடன்களை முன்பாகவே செலுத்தி முடிப்பதற்கு கட்டணம் (foreclosure charges) அல்லது அபராதம் வசூலிக்கக்கூடாது எனவும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளில் வீட்டுக் கடனை அடைப்பதற்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் வரை கொடுக்கலாம் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *